நெல்லை: திருடிய நகையை மீண்டும் வீட்டில் வைத்த திருடன்.. என்ன காரணம்?
Sitaare Zameen Par: "சவாலில் போராடி வருகிறேன்!" - யூட்யூபில் படத்தை வெளியிட ஆமீர் கான் முடிவு!
இயக்குநர் ஆர். எஸ். பிரசன்னா இயக்கத்தில் ஆமீர் கான் நடித்திருந்த 'சித்தாரே ஜமீன் பர்' திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஆமீர் கானுடன் ஜெனிலியாவும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இத்திரைப்படம் எப்போது ஓடிடி-யில் வெளியிடப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது அது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இத்திரைப்படம் எந்த டிஜிட்டல் ஓடிடி தளங்களிலும் இல்லாமல், யூட்யூப்பில் அனைவரும் எளிமையாகப் பார்க்கும் வண்ணம் வெளியிடவிருக்கிறார்கள்.
யூட்யூப்பில் படத்திற்கான கட்டணத்தைச் செலுத்தி முழு திரைப்படத்தைப் பார்வையாளர்கள் காணலாம் என அறிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து நடிகர்-தயாரிப்பாளர் அமீர் கான் கூறுகையில், "கடந்த 15 ஆண்டுகளாக திரையரங்குகளுக்கு வராத பார்வையாளர்களை அல்லது பல்வேறு காரணங்களுக்காக திரையரங்குகளுக்குள் நுழைய முடியாதவர்களை எவ்வாறு சென்றடைவது என்ற சவாலில் நான் போராடி வருகிறேன்.
இறுதியாக அதற்கு மிகச் சரியான நேரம் வந்துவிட்டது. நமது அரசாங்கம் UPI-ஐக் கொண்டுவந்தவுடன், மின்னணு கட்டணங்களில் இந்தியா உலகில் முதலிடத்தைப் பிடித்தது. இந்தியாவில் இணைய ஊடுருவல் வியத்தகு முறையில் வளர்ந்து வருகிறது.
மேலும், பெரும்பாலான சாதனங்களில் YouTube இருப்பதால், இந்தியாவில் பரந்த அளவிலான மக்களையும், உலகின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியையும் நாம் இறுதியாகச் சென்றடைய முடியும்.

சினிமா அனைவருக்கும் நியாயமான மற்றும் மலிவு விலையில் சென்றடைய வேண்டும் என்பதே எனது கனவு. மக்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சினிமாவைப் பார்ப்பதற்கான வசதி கிடைக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
இந்த யோசனை வெற்றிபெற்றால், தடைகளைத் தாண்டி படைப்பாற்றல் மிக்க குரல்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்ல முடியும்.
சினிமா துறையில் நுழையும் இளைய படைப்பாளிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும். இதை அனைவருக்குமான வெற்றியாக நான் பார்க்கிறேன்," எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...