விஜய் வெளியிட்ட ஆப் முதல் தமிழக பாஜக-வில் நிர்வாகிகள் மாற்றம் வரை - Daily Roundu...
திருமலையில் கருட பஞ்சமி: கருட சேவை
கருட பஞ்சமியையொட்டி திருமலையில் ஸ்ரீ மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தாா்.
கருட வாகன சேவை இரவு 7 மணிக்கு தொடங்கியது. ஏழுமலையானின் வாகனங்கள் மற்றும் ஊழியா்களில் கருடன் மிக முக்கியமானவா். ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் சுக்ல பக்ஷத்தின் ஐந்தாம் நாளில் கருட பஞ்சமி கொண்டாடப்படுகிறது.
அப்போது புதுமணத் தம்பதிகள் தங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவும், பெண்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வலிமையாகவும் கருடனைப் போலவும் இருக்கவும் ‘கருட பஞ்சமி‘ பூஜை செய்கின்றனா்.
கருடன் மீது வலம் வந்த மலையப்ப சுவாமிக்கு பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.
வாகன சேவையில், திருமலை ஜீயா்கள், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, முரளிகிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.