"ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம்; ஒன்றிய அரசுகூட கேட்டது, ஆனால், தமிழ்நாடு அ...
Nagarjuna: "நாகர்ஜூனா, என் கன்னத்தில் 14 முறை அறைந்தார்..!" - நடிகை ஓப்பன் டாக்!
'என் சுவாசக் காற்றே', 'நெஞ்சினிலே' ஆகியத் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை இஷா கோபிகர் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் தடம் பதித்தவர்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், தன்னை நடிகர் நாகார்ஜுனா கன்னத்தில் அறைந்ததாகப் பகிர்ந்த தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

நடிகை இஷா கோபிகர் நாயகியாக நடித்த இரண்டாவது திரைப்படமான 'சந்திரலேகா' திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான் இப்படியான சம்பவம் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அது குறித்து பேட்டியில் பேசிய இஷா கோபிகர், "நடிகர் நாகார்ஜுனாவிடமிருந்து நான் கன்னத்தில் அறை வாங்கினேன். நான் அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையாக நடிக்க விரும்புவேன்.
அந்தக் காட்சியில் நல்ல முறையில் நடிக்க விரும்பினேன். அந்தக் காட்சியில் நான் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்.
ஆனால், அந்தக் காட்சியில் என்னால் அதைச் சரியாக வெளிப்படுத்த முடியவில்லை.
அப்போது அவர் என்னை அறையும்போது, அது எனக்கு வலிக்கவில்லை.

இது எனது இரண்டாவது படம், அதனால் நான் அவரிடம், 'நீங்கள் உண்மையாகவே என்னை அறையுங்கள்' என்று சொன்னேன்.
அவர், 'நிச்சயமாகவா? இல்லை, என்னால் முடியாது' என்றார். நான், 'எனக்கு அந்த உணர்வு வேண்டும். இப்போது வரை எனக்கு அந்த உணர்வு வரவில்லை' என்றேன்.
அதனால் அவர் என்னை அறைந்தார், ஆனால் மெதுவாகவே அறைந்தார். கோபத்தை வெளிப்படுத்த முயற்சிக்கையில் 14 முறை அறை வாங்கினேன்.
இறுதியில், என் முகத்தில் உண்மையாகவே அறையின் குறிகள் தெரிந்தன," எனப் பகிர்ந்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...