Rashmika Mandanna:``உங்களைப் போல நடிக்க வேண்டும் விஜய் தேவரகொண்டா"- புகழ் மாலை சூட்டிய ரஷ்மிகா
'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது இவர் ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஜூலை 31-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது. கிங்டம் திரைப்படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு நடிகை ரஷ்மிகா மந்தனா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார்.

அந்தப் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. அந்தப் பதிவில், `வாவ்!!! என்ன ஒரு டிரெய்லர் இது! இந்த அருமையான டிரெய்லரைப் பார்த்தப் பிறகு இன்னும் படம் பார்க்க 4 நாட்கள் காத்திருக்க வேண்டுமா... இதெல்லாம் நியாயமில்லை! விஜய் தேவரகொண்டா, நான் எப்போதும் உங்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் - நீங்கள் வேறு ரகம்... நான் உங்களைப் போல நடிக்க வேண்டும் என கற்றுக்கொண்டே இருக்கிறேன்.
அப்படி நான் கற்றுக்கொண்டாலும், உங்கள் நடிப்பில் 50% நடிப்பாகதான் அதுவும் இருக்கும். இயக்குநர் கௌதம் தின்னனுரி, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இருவரும் பெரும் மேதைகள். இந்தப் படத்தில் நடித்திருக்கும் பாக்யஸ்ரீ போர்ஸ் மிகவும் அழகாக இருக்கிறார்." எனப் பாராட்டியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...