செய்திகள் :

Rashmika: 'டியர் டைரி' என்ற வாசனைத் திரவிய பிராண்டை தொடங்கிய நடிகை; விலை என்ன தெரியுமா?

post image

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தனது முதல் தொழில்முனைவு முயற்சியாக 'டியர் டைரி' என்ற வாசனைத் திரவிய பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த பிராண்ட், அவரது தனிப்பட்ட நினைவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பிராண்ட் மேம்பாட்டு நிறுவனமான The PCA Companies உடன் இணைந்து 'டியர் டைரி' பிராண்ட் உலகளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

‘டியர் டைரி’ என்ற வாசனைத் திரவியங்கள், இளமை, மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிகரமான பயணங்களை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஷ்மிகா, இந்த தயாரிப்பு குறித்து பேசுகையில், “ஒவ்வொரு வாசனையும் எனது வாழ்க்கையின் ஒரு பகுதியைப் பிரதிபலிக்கிறது. இது என் ரசிகர்களுடன் என் இதயத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு வழி,” என்று கூறினார்.

இந்த பிராண்டில் உள்ள ஒவ்வொரு வாசனையும் இந்தியாவின் பாரம்பரிய மணங்களான மல்லிகை, இளஞ்சிவப்பு தாமரை, கரும்பு, லைச்சி போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். 'நேஷனல் க்ரஷ்', 'இர்ரிபிளேஸபிள்', 'காண்ட்ரவர்ஷியல்' போன்ற வாசனைகள் ராஷ்மிகாவின் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை பிரதிபலிக்கின்றன.

இந்த வாசனை திரவியம் 100 மி.லி 2,599 ரூபாய்க்கும், 10 மி.லி 599 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Pawan Kalyan: "சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போகிறேன்; ஆனால்..." - பவன் கல்யாண் ஓபன் டாக்

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.சினிமாவில் இருந்து ஓய்வு பெறாமல் துண... மேலும் பார்க்க

Hari Hara Veera Mallu: "ஔரங்கசீப்பைப் பற்றிப் பேசவில்லை; ஆனால்,.." - பவன் கல்யாண் சொல்வது என்ன?

இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் இம்மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பவன் ... மேலும் பார்க்க

Pawan Kalyan: "ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்ததுதான் நான் செய்த ஒரே தவறு!" - பவன் கல்யாண் பளீச்

இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹரி ஹர வீரமல்லு' படம், நாளை மறுநாள் (ஜூலை 24) வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பவன் கல்யாண் பங்கேற்க... மேலும் பார்க்க

Peddi Update: "RRR படத்தை விட..." - ராம் சரணின் முறுக்கேறிய உடல், நீண்ட முடி, பிரமாண்ட திட்டம்!

'உபேன்னா' படத்தை இயக்கிய இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், சிவ ராஜ்குமார், ஜான்வி கபூர் போன்றோர் 'பெத்தி' படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்கள். நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.... மேலும் பார்க்க

Pawan Kalyan: ``திரைப்படங்களைப் பற்றி பேசுவதற்கு தயங்குவேன்; அது ஆணவம் கிடையாது.." - பவன் கல்யாண்

இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹரி ஹர வீர மல்லு' இம்மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஹரி ஹர வீரமல்லு படத்தில்...இந்தப் படத்தின் ப்ரோம... மேலும் பார்க்க

`சலூன் கடைக்காரர் மகன் டு ஆஸ்கர் பாடல்' - ராகுலுக்கு ரூ.1கோடி ஊக்கத்தொகை அறிவித்த தெலங்கானா முதல்வர்

RRR திரைப்படத்தில் வெளியாகி ஆஸ்கர் வென்ற நாட்டு நாட்டு பாடல் மூலம் பிரபலமடைந்த பாடகர் ராகுல் சிப்லிகுஞ்சுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளித்து அறிவித்துள்ளார் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி. மிக... மேலும் பார்க்க