கிராமப்புற வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு ரூ. 44,000 கோடி விடுவிப்பு: மத்திய அ...
Hari Hara Veera Mallu: "ஔரங்கசீப்பைப் பற்றிப் பேசவில்லை; ஆனால்,.." - பவன் கல்யாண் சொல்வது என்ன?
இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் இம்மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பவன் கல்யாண் பங்கேற்க மாட்டார் என இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அறிவித்திருந்தார்.

ஆனால், நேற்று மாலை நடைபெற்ற படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் அவர் கலந்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து, திடீரென இன்று நடைபெற்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டு பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
மேடையில் பேசிய பவன் கல்யாண், "ஹரி ஹர வீர மல்லு ஒரு சுவாரஸ்யமான கதையைக் கொண்ட திரைப்படம். இந்தப் படத்தில் விஜயநகரப் பேரரசின் பெருமையைப் பற்றிப் பேசவில்லை.
ஔரங்கசீப்பின் தீய செயல்களைப் பற்றியும் பேசவில்லை. ஆனால், அந்தக் காலத்தில் இந்துவாக வாழ வேண்டுமென்றால் வரி கட்ட வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட காலத்தில், சத்ரபதி சிவாஜி துணிச்சலாகப் போராடினார்.
ஹரி ஹர வீரமல்லு மதத்திற்காகப் போராடிய ஒரு கற்பனைக் கதாபாத்திரம். கோஹினூர் வைரம் ஆந்திராவின் கொல்லூரில் கிடைத்தது. அது கைகள் மாறி, இப்போது லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
இப்படி கிரிஷ் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது. அதனால்தான் இந்தப் படத்தில் என் முழு ஆற்றலையும் செலுத்தினேன்.

அரசியலில் நுழைந்த பிறகு, நிஜ வாழ்க்கையில் ரவுடிகளையும் எதிர்கொள்கிறேன்.
நான் முன்பு கற்றுக்கொண்ட கராத்தே கலைகளைப் பயிற்சி செய்து, க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சியில் நடித்தேன். இந்தப் படம் எத்தனை கோடிகளை வசூலிக்கும் என்று என்னால் சொல்ல முடியாது.
நீங்கள் விரும்பும் வெற்றியை நானும் விரும்புகிறேன். உங்களுக்குப் பிடித்தால், பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைத் தாருங்கள். நீங்களே என் பலம்.
இந்த இதயம் உங்களுக்காகத் துடிக்கிறது. உங்கள் பிரச்னைகளைத் தீர்க்க இது துடிக்கிறது" எனப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...