செய்திகள் :

keerthy suresh: ``சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன்; அப்போது..." - நடிகை கீர்த்தி சுரேஷ்

post image

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 'உப்பு கப்புறம்பு' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் தனியார் நிறுவனத்துக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டியளித்திருந்தார். அதில், ``இந்தப் படத்தின் படப்பிடிப்பு வீட்டில் இருப்பது போல இருந்தது. முற்றிலும் நிதானமாக, பொறுமையாக நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும், நான் உண்மையில் இன்னும் கொஞ்ச நாள்கள் படப்பிடிப்பு இருந்திருக்கலாம் என வருத்தப்பட்டேன்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

அதுதான் நகைச்சுவையின் மந்திரம். நீங்கள் உங்களை மேம்படுத்திக்கொள்ள நிறைய அறிவுகளை, அனுபவங்களை வழங்கக்கூடிய, அர்த்தமுள்ள விவாதங்கள், உரையாடல்களை நடத்தக்கூடிய ஒரு இடத்தில் பணிபுரியும் போது அது சிறப்பான அனுபவமாக இருக்கும். அதுதான் நம் வேலை என்பதைக் கடந்து உள்ளிருந்து தானாக எல்லாம் நடக்கத் தொடங்கும். அப்படியான வேலைதான் உங்களை மகிழ்ச்சியாகவும் உணர வைக்கிறது. உப்பு கப்புறம்பு படத்தின் நகைச்சுவையும், அதனுடன் அது கொண்டுவரும் செய்தியும்தான் என்னை ஈர்த்தது.

இந்தப் படத்தின் அபூர்வா கதாபாத்திரம் புத்துணர்ச்சியூட்டும் வித்தியாசமான கதாபாத்திரம். அவர் இலட்சியவாதி, உறுதியானவர். குறிப்பாக நமது கிராமப்புற கலாச்சாரத்தில் அபூர்வா கதாபாத்திரத்தை உயிர்ப்பித்தது ஒரு முழுமையான மகிழ்ச்சியாக இருந்தது. இந்தத் திரைப்படம் நகைச்சுவையைப் பயன்படுத்தி ஒரு தீவிரமான விஷயத்தை முன்னிலைப்படுத்துகிறது. எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம் என்றில்லை.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன். அப்படி ஆகிவிட்டால் நன்றாக சாப்பிடுவேன். அதேபோல் காரை எடுத்துக்கொண்டு தனியாக ட்ரைவ் செய்வேன், அப்போது நல்ல மியூசிக் கேட்பேன். அதுமட்டுமின்றி, வீட்டில் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். அப்செட் என்ன வந்தாலும் அவன் முகத்தை பார்த்தால் போதும் அவை அனைத்தும் காணாமல் போய்விடும்" என்கிறார்.

1897ஆம் ஆண்டு பிராம் ஸ்டோக்கர் எழுதிய ‘டிராகுலா’ நாவல் இன்று வரை ஹாரர் நாவல்கள் வரிசையின் சக்கரவர்த்தியாக இருக்கிறது. ஹாரர் நாவல்களில் பிதாமகாக இருக்கும் டிராகுலா மர்மக் கதையை, முழுமையான ஆடியோ அனுபவமாக, Vikatan Playல் நீங்கள் கேட்கலாம்!

https://www.vikatan.com/vikatan-play/dracula-audio-series

Genelia: ``காலத்தால் உறைந்து அப்படியே இருக்கிறாய்..."- நடிகை ஜெனிலியா குறித்து இயக்குநர் S.S ராஜமௌலி

கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் காலி ஜனார்த்தன் ரெட்டியின் மகன் கிரீட்டி ரெட்டி. இவர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகும் படம் ஜூனியர். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், வி. ரவிச்ச... மேலும் பார்க்க

Uppu Kappurambu Review: இடுகாட்டில் ஹவுஸ்ஃபுல் பிரச்னை- கீர்த்தி சுரேஷின் காமெடி படம் வொர்க் ஆகிறதா?

சிட்டி ஜெயபுரம் என்ற புனைவு கிராமம். அதன் தலைவர் இறந்துவிடுகிறார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரின் மகளான அபூர்வா (கீர்த்தி சுரேஷ்) ஊர் தலைவர் நாற்காலியில் அமர்த்தப்படுகிறார். ஊர் தலைவர் பதவியில் துளிய... மேலும் பார்க்க

Prabhas: சிறுநீரக கோளாறால் உயிருக்கு போராடும் நடிகர்; ரூ.50 லட்சம் கொடுத்து உதவ முன்வந்த பிரபாஸ்

'பன்னி', 'அதிர்ஸ்', 'தீ' மற்றும் 'மிரப்காய்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் ஃபிஷ் வெங்கட். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார... மேலும் பார்க்க

'சில கதைகள் மட்டும்தான் இந்தியா முழுவதற்கும் வெளியாவதற்குத் தகுதியானது'- நாகர்ஜுனா சொல்வது என்ன?

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் ... மேலும் பார்க்க

'என் தந்தை கடவுள் மறுப்பாளர்; இந்தப் படத்தைப் பார்க்கும்போது...'- 'கண்ணப்பா' படம் குறித்து ராதிகா

மோகன் பாபு தயாரிப்பில் அவரின் மகன் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘கண்ணப்பா’. ச... மேலும் பார்க்க

"என் 5 படங்களின் கதையையும் அந்த ஹீரோவிடம்தான் முதலில் சொன்னேன், ஆனால்..!" - 'சூர்யா 46' இயக்குநர்

'லக்கி பாஸ்கர்' படத்திற்குப் பிறகு கோலிவுட், டோலிவுட் என அனைத்துப் பக்கங்களிலும் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. 'லக்கி பாஸ்கர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யாவி... மேலும் பார்க்க