மும்பை: சட்டமன்ற வளாகத்தில் அடிதடி.. பாஜக, சரத்பவார் கட்சி எம்எல்ஏ-க்கள் மோதலுக்...
செம்மணி: தோண்டியெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள்! யார் இவர்கள்?
இலங்கை நாட்டின், கொழும்புவில் உள்ள செம்மணி பகுதியிலுள்ள புதைகுழியில் இருந்து 4 முதல் 5 வயதிலான 65 சிறுமிகளின் எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் யார்? பள்ளிச் சிறுமிகளா? பெற்றோரிடமிருந்து பிரித்து தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பல எலும்புகளுடன் பள்ளிப் பைகள், பொம்மைகளும் இருந்ததாக நேரில் பார்த்த அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
1990-களின் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான போரின்போது கொல்லப்பட்டவா்கள் செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டிருப்பதாக கடந்த 1998-இல் வெளி உலகுக்குத் தெரியவந்தது.
அப்போது அங்கிருந்து 15 எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டன. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதன்பிறகு தற்போது அப்பகுதியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டபோது, மேலும் சில மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு முறைப்படி, சட்டத்துறையின் கண்காணிப்பின் கீழ் எலும்புகளை தோண்டியெடுக்கும் பணியை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்தான், 4 - 5 வயதுடைய 65 சிறுமிகளின் எலும்புக்கூடுகள், பள்ளிப்பை, பொம்மைகளுடன் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கையிலிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட புதைகுழிகளில் ஒன்றாகத்தான் செம்மணி புதைகுழி இருக்கிறது. 2009ஆம் ஆண்டு முடிவுபெற்ற, 26 ஆண்டகால தமிழீழ போரின்போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் மாயமாகினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) முடிந்த தோண்டியெடுக்கும் பணிகள் ஜூலை 21ஆம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது.