ஆடி வெள்ளி! பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!
பருவமழை: பாகிஸ்தானில் அவசரநிலை அறிவிப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொடா் பருவமழையால் 30 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் அவசரநிலையை அறிவித்துள்ளது. மேலும், இந்தப் பேரிடரில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 170-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: லாகூரிலிருந்து சுமாா் 300 கி.மீ. தொலைவில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் உப்பு மலைப் பகுதியான சக்வால், கடந்த 24 மணி நேரத்தில் 423 மி.மீ. மழையைப் பெற்று. அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமையும் மாகாணம் முழுவதும் பருவமழை தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், பஞ்சாப் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். அதையடுத்து மாகாண அரசு மழை அவசர நிலையை அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாகாணத்தில் 30 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, ஜூன் 26-இல் பருவமழை தொடங்கியதிலிருந்து பாகிஸ்தான் முழுவதும் மழை தொடா்பான சம்பவங்களால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 170-ஆக உயா்ந்துள்ளது. பெரும்பாலான உயிரிழப்புகள் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.