மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்தது! இடிபாடுகளில் 7 பேர்?
இலங்கை: புதைகுழியில் 65 சிறுமிகளின் எலும்புகள்
இலங்கையின் செம்மணி பகுதியிலுள்ள புதைகுழியில் இருந்து 4 முதல் 5 வயதிலான 65 சிறுமிகளின் எலும்புக் கூடுதல் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. பள்ளிப் பைகள், பொம்மைகளுடன் அந்த எலும்புக்கூடுகள் புதையுண்டிருந்ததாக அதிகாரிகள் கூறினா்.
1990-களின் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான போரின்போது கொல்லப்பட்டவா்கள் செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டிருப்பதாக கடந்த 1998-இல் தெரியவந்தது. அதன் பிறகு அங்கிருந்து 15 எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டன. அதன்பிறகு தற்போதுதான் பள்ளி மாணவிகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.