செய்திகள் :

Fahadh Faasil : `ஸ்மார்ட்போன் இல்ல, பட்டன் போன் தான்; விலை இத்தனை லட்சமா?’- வைரலான பஹத் பாசில் போன்

post image

மலையாளம் கடந்து தன் நடிப்புத் திறமையால் இந்தியளவில் புகழ் பெற்றவர் நடிகர் பஹத் பாசில். தமிழில் 'மாரீசன்' பட வெளியீட்டுக்கு தயாராகி வருகிறார். இந்தப் படம் ஜூலை 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது. நடிகர் பஹத் பாசில் எப்போதுமே சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பவர். தற்போது அதனையும் கடந்து, அவர் ஸ்மார்ட் போன் கூட பயன்படுத்துவதில்லை என்ற செய்திகள் வெளியாகி வைரலானது.

Vertu Ascent Ti
Vertu Ascent Ti

இதை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் நடிகர் வினய் போர்ட் அளித்த பேட்டி ஒன்றில், ''நடிகர் பஹத் பாசில் நவீனமற்ற பட்டன் போனை பயன்படுத்துகிறார்' எனப் பகிர்ந்துகொண்டார். இதற்கிடையில் நடிகர் பஹத் பாசில் செல்போனில் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதில், நடிகர் வினய் போர்ட் கூறியது போலவே, பட்டன் போனையே பஹத் பாசில் பயன்படுத்துகிறார். இந்தக் காட்சி ரசிகர்களிடம் ஆச்சர்யத்தையும் அதே நேரம் வியப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது நடிகர் பஹத் பாசில் பயன்படுத்தும் போன் சாதாரண ஃபீச்சர் போன் கிடையாது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் வெளியிடப்பட்டபோது சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள அதி-ஆடம்பர போன். இது தொடர்பாக வெளியான தகவலின்படி, ``நடிகர் பஹத் பாசில் பயன்படுத்தும் செல்போன் வெர்டு அசென்ட் டிஐ ஆகும். முதன்முதலில் 2007-ல் அறிவிக்கப்பட்டு 2008-ல் இந்தப் போன் வெளியிடப்பட்டது. இந்த மாடல் செல்போன் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது.

பஹத் பாசில்
பஹத் பாசில்

இந்த செல்போனின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் பிரீமியம். டைட்டானியம், சபையர் படிகங்கள், லெதர் தோல் ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்த செல்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், இதன் ஆரம்ப விலை ரூ.5.54 லட்சமாக இருந்தது. அதன் பின்னர் அது நிறுத்தப்பட்டிருந்தாலும், இந்த செல்போன் தற்போது ரூ.1–1.5 லட்சத்திற்கு விற்கப்படுவதை கவனிக்க முடிகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

கழுத்தில் பாம்புடன் பைக் ஓட்டிய நபர்; விஷக்கடியால் உயிரிழப்பு - என்ன நடந்தது?

மத்திய பிரதேசத்தில் பல ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் நபரை அவர் பிடித்த பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் ரகோகர் என்ற இடத்தில் வசிப்பவர் தீபக் மகாபர். அங்குள்ள பல்கலைக்கழகத்தி... மேலும் பார்க்க

தங்க கடத்தல்: நடிகை ரன்யா ராவ் மீது cofeposa சட்டத்தில் வழக்கு பதிவு! - விவரம் என்ன?

நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.12.56 கோடியாகும். விமான நிலையத்தில் பாதுகா... மேலும் பார்க்க

மராத்திக்கு எதிரான பேசினாரா ராஜஸ்தான் இளைஞர்? அடித்து ஊர்வலமாகக் கூட்டிச் சென்ற ராஜ் தாக்கரே கட்சி

மகாராஷ்டிராவில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியினர் மராத்திக்காகவும், மராத்தி மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்ற... மேலும் பார்க்க

இங்கிலாந்து ஏலத்தில் விற்கப்பட்ட மகாத்மா காந்தியின் எண்ணெய் ஓவியம்; எத்தனை கோடிக்குத் தெரியுமா?

மகாத்மா காந்தி வரைவதற்கு அவர் அமர்ந்த ஒரே ஓவியம் இதுதான் என்று நம்பப்படுகிறது. இந்த அரிய எண்ணெய் ஓவியம், இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 175 கோடி ரூபாய்க்கு (சுமார் 17 மில்லியன் பவுண்டுகள்) விற்பனையாக... மேலும் பார்க்க

கைகொடுக்காத நீட்; 20 வயதில் Rolls Royce-ல் ரூ.72 லட்சம் சம்பளம்! - கிராமத்து மாணவி சாதித்தது எப்படி?

கர்நாடகா மாநிலம் தீர்த்தஹலி தாலுகாவில் கொடுருகிராமத்துப் பகுதியைச் சேர்ந்தவர் ரிதுபர்ணா. உயர்நிலைப் படிப்பு, PUC முடித்தவுடன் மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வை எழுதியிருக்கிறார். ஆனால், நீட் தேர்வின்... மேலும் பார்க்க

`கயிறுக்கு முன்னால் ஊசலாடும் உயிர்' - மன்னிப்பா? மரணமா? - நிமிஷா பிரியாவின் வழக்கில் நடந்தது என்ன?

``எப்படி துருதுருனு திரிஞ்சிட்டு இருந்த புள்ள அது தெரியுமா... ட்ராக்டர் ஓட்டும், வயலுக்கு போயி விவசாய வேலைக்கூட பார்க்கும். படிப்புலயும், எதிர்காலம் பத்தின சிந்தனையும் ரொம்ப அதிக கவனமா இருப்பா. எப்படி... மேலும் பார்க்க