செய்திகள் :

ஜூலை 20ல் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை மறுநாள்(ஜூலை 20) நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

புதிய கட்சியான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் மாநாடு, பூத் கமிட்டி மாநாடு, செயற்குழு கூட்டம் என பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நாளை மறுநாள்(ஜூலை 20) சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக தவெகவில் ஒரு புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கூட்டத்தில் விஜய் அதனை வெளியிடப்போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கை என்ற இலக்குடன் தவெக தொண்டர்கள் தங்கள் பணியைத் தொடங்கவுள்ளனர். இதுதொடர்பாகவும் கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

தவெகவின் 2-வது மாநாடு வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamilaga Vettri Kazhagam district secretaries meeting is to be held on July 20 at the party office in Panayur, Chennai.

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 பேருக்கு வாழ்நாள் சிறை!

கோவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையை விதித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை, சீரநாய... மேலும் பார்க்க

3 நாள்களுக்கு நீலகிரி, கோவைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு 3 நாள்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தெற்கு ஆந்திர... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் அளித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.வேலூரைச் சேர்... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியா? தவெகவுடன் கூட்டணியா? - இபிஎஸ் பதில்!

தமிழ்நாட்டில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி உரு... மேலும் பார்க்க

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ - ஜாக் அமைப்பினர் போராட்டம்!

திருவள்ளூர்: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் 195 பேர் கைது செய்யப்பட்டனர்.பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்!

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜராகியுள்ளனர். அதிகாரிகளால் சம்மன் அளிக்கப்பட்ட அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திகே... மேலும் பார்க்க