தில்லியில் ஒரே நாளில் 45 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பில் தலைநகரம்!
ஓடிடியில் வெளியானது குபேரா!
நடிகர் தனுஷ் நடித்த குபேரா படம் ஓடிடி தளத்தில் இன்று(ஜூலை 18) வெளியாகியுள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் பான் இந்தியப் படமாக உருவான குபேரா, உலகம் முழுவதும் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், தமிழில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், தெலுங்கில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

ரஷ்மிகா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம், ரூ. 132 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்நிலையில், குபேரா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.