``காமராஜரை எருமைத் தோலன் என திமுக விமர்சித்தது!" - அண்ணாமலை காட்டம்
பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை திருப்பூரில் பத்திரிகையாளரை சந்தித்திருந்தார். அப்போது, திமுக பற்றியும் காமராஜர் பற்றியும் சில முக்கியமான விஷயங்களை அவர் பேசியிருந்தார்.

அண்ணாமலை பேசியதாவது, ``காமராஜரை எருமைத் தோலன் என திமுக முரசொலியில் விமர்சித்தது.
காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செயலிழந்துவிட்டது.
வழக்கம்போல கடைசியில் சாரிதான் கேட்பார்
கூட்டணியில் இருந்தால் போதும் என்ற நிலைக்கு காங்கிரஸ் வந்துவிட்டது. திருவள்ளூர் சிறுமியின் வன்கொடுமை விவகாரத்தில் ஸ்டாலின் என்ன செய்தார்? வழக்கம்போல கடைசியில் சாரிதான் கேட்பார்.
திமுக உறுப்பினராக சேர்ந்தால்தான் 1000 ரூபாய் கிடைக்கும், தேர்தலின் போது பணம் கிடைக்கும் என மிரட்டியே மக்களை உறுப்பினர்களாக சேர்க்கிறார்கள்.
கூவிக்கூவி மாம்பழம் விற்பதைப் போல உறுப்பினர்களை சேர்க்கிறார்கள்.
திருப்பூரில் போதைப் பழக்கம் அதிகமாகிவிட்டது. 2026 தேர்தல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை மையப்படுத்திய தேர்தலாக இருக்கும்.' என்றார்.
அண்ணாமலையோடு இருந்த மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், 'திமுக காமராஜரை ரொம்பவே கடுமையாக விமர்சித்திருக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.' என்றார்.