மேற்கு வங்கத்தில் ரயில் மோதியதில் 3 யானைகள் பலி !
மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இரண்டு கன்றுகள் உள்பட 3 யானைகள் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தாலா ரயில் நிலையம் அருகே யானைக கூட்டம் மீது அந்த வழியாக சென்ற ஜன்ஷதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி வியாழக்கிழமை இரவு மோதியது. இந்த சம்பவத்தில் இரண்டு யானைக் கன்றுகள் உள்பட 3 யானைகள் பலியானதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ஜார்க்கண்டின் டால்மா வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு யானைக் கூட்டம் கடந்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர்கள் மேலும் கூறினர். தலைமை வனப் பாதுகாவலர் எஸ். குழந்தைவே. இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். யானைக் கூட்டம் நடமாட்டத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு ரயில்வேக்கு தகவல் அளித்த போதிலும், சோகத்தைத் தவிர்க்க முடியவில்லை.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் கைது !
அப்பகுதி வன அதிகாரி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று அவர் தெரிவித்தார். 3 யானைகள் ரயில் மோதி பலியான நிகழ்வு மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.