செய்திகள் :

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

post image

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, 5 ஆப்கன் சிறுவர்கள் பெஷிகெல் பகுதியிலுள்ள மசூதியில் நேற்று (ஜூலை 17) தஞ்சமைந்துள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அசிஸ்கெல் மற்றும் மந்திகெல் பகுதிகளுக்குள் ஊடுறுவ முயன்ற, 15 முதல் 18 வயதுடைய 5 சிறுவர்களையும் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்ததும், அவர்கள் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களைத் தற்போது ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

முன்னதாக, ஜூலை மாதம் துவங்கியது முதல் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக ஊடுறுவ முயன்ற 30 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம், ஆப்கானிஸ்தானில் இருந்து வடக்கு வசிரிஸ்தான் மாவட்டம் வழியாக பாகிஸ்தானுள் ஊடுறுவ முயன்ற சுமார் 71 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கலப்படத்தால் நடுவழியில் நின்ற பாதுகாப்பு வாகனம்! டாக்ஸியில் சென்ற ஈரான் அதிபர்!

Pakistani security forces have arrested five Afghan children who were members of a suicide squad on the Pakistan-Afghanistan border.

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர்!

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் கலோல் வட்டத்தில் உள்ள சத்ரல் கிராமத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண்... மேலும் பார்க்க

ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை: முதல்வர் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரத்தில் ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். தாணே, நாசிக் மற்றும் மும்பைச் செயலகம் ஆகியவற்றில் உள்ள மாநில அதிகாரிகளை குறிவைத்து ஹனிட்ராப் மோசடி நடந... மேலும் பார்க்க

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது !

அசாமின் இரண்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க

கேஎஃப்சி உணவகத்தை மூடவைத்த இந்து அமைப்பினர்!

உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் இந்திராபுரத்தில் உள்ள... மேலும் பார்க்க

இந்து, பெளத்த, சீக்கியரைத் தவிர பிறரின் எஸ்சி சான்றிதழ் ரத்து: ஃபட்னவீஸ்

இந்து, பெளத்த, சீக்கிய மதங்களைத் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் போலியாக எஸ்சி சான்றிதழ் பெற்றிருந்தால் அவை ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.அரசு வேலைகள்... மேலும் பார்க்க