செய்திகள் :

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

post image

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அபுஜ்மத் வனப்பகுதியில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழுக்கள் ஈடுபட்டிருந்தன. அப்போது, துப்பாக்கிச் சண்டை நடந்தது.

"பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும்இடையே பிற்பகல் முதல் பலமுறை துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதுவரை, என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து 6 நக்சல்களின் உடல்கள், ஏகே-47/எஸ்எல்ஆர் துப்பாக்கிகள், பிற ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன," என்று அவர் கூறினார்.

மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுரை!

நடவடிக்கை இன்னும் நடந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Six naxalites were killed in an encounter with security personnel in Narayanpur district of Chhattisgarh on Friday, police said.

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர்!

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் கலோல் வட்டத்தில் உள்ள சத்ரல் கிராமத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண்... மேலும் பார்க்க

ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை: முதல்வர் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரத்தில் ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். தாணே, நாசிக் மற்றும் மும்பைச் செயலகம் ஆகியவற்றில் உள்ள மாநில அதிகாரிகளை குறிவைத்து ஹனிட்ராப் மோசடி நடந... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, 5... மேலும் பார்க்க

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது !

அசாமின் இரண்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ச... மேலும் பார்க்க

கேஎஃப்சி உணவகத்தை மூடவைத்த இந்து அமைப்பினர்!

உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் இந்திராபுரத்தில் உள்ள... மேலும் பார்க்க

இந்து, பெளத்த, சீக்கியரைத் தவிர பிறரின் எஸ்சி சான்றிதழ் ரத்து: ஃபட்னவீஸ்

இந்து, பெளத்த, சீக்கிய மதங்களைத் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் போலியாக எஸ்சி சான்றிதழ் பெற்றிருந்தால் அவை ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.அரசு வேலைகள்... மேலும் பார்க்க