செய்திகள் :

விப்ரோ: முதல் காலாண்டு வருவாய் 3% அதிகரிப்பு!

post image

புதுதில்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.8 சதவிகிதம் அதிகரித்ததையடுத்து, ஐடி சேவை நிறுவனமான விப்ரோவின் பங்குகள் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் இன்று உயர்ந்து முடிந்தன.

நிறுவனத்தின் முடிவுகளை உற்சாகப்படுத்தும் விதமாக, பிஎஸ்இ-யில் பங்கின் விலை 4.43 சதவிகிதம் உயர்ந்து ரூ.271.80 ஆக இருந்தது. இறுதியாக 2.56 சதவிகிதம் உயர்ந்து ரூ.266.90 ஆக முடிந்தது.

என்எஸ்-யில் நிறுவனத்தின் பங்குகள் 2.20 சதவிகிதம் உயர்ந்து ரூ.266.35 ஆக முடிந்தது. இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.6,980.42 கோடி உயர்ந்து ரூ.2,79,782.74 கோடியாக முடிந்தது.

இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.8 சதவிகிதம் அதிகரித்து ரூ.3,336.5 கோடியாக உள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.3,036.6 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்ததாக தெரிவித்தது.

நிதியாண்டின் முதல் காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து கிடைத்த வருவாய் ரூ.21,963.8 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு அது ரூ.22,134.6 கோடியாக இருந்தது.

தொடர்ச்சியாக, லாபம் மற்றும் வருவாய் முறையே 7 சதவிகிதம் மற்றும் 1.6 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வங்கிப் பங்குகளின் வீழ்ச்சியை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

Shares of IT services firm Wipro ended nearly 3 per cent higher on Friday after it posted a 9.8 per cent increase in consolidated net profit during the April-June quarter.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 78% உயர்வு!

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 78 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகங்க... மேலும் பார்க்க

பந்தன் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் சரிவு!

கொல்கத்தா: தனியார் துறை கடன் வழங்குநரான பந்தன் வங்கி, வளர்ந்து வரும் தொழில்முனைவோர் வணிகத்தின் மீதான அழுத்தம், காரணமாக 2025-26 முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் குறைத்துள்ளதாக நுண்நிதி வங்கியான பந்தன் ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் குறைந்து ரூ.86.16 ஆக நிறைவு!

மும்பை: அந்நிய நிதி வெளியேற்றம், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு ஆகியவற்றால், இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ... மேலும் பார்க்க

வங்கிப் பங்குகளின் வீழ்ச்சியை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: நிறுவனத்தின் காலாண்டு வருவாய் முடிவுகள் மந்தமான தொடக்கத்திற்குப் பிறகு, அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் வங்கிப் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததன் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்... மேலும் பார்க்க

சரிவில் பங்குச்சந்தை! 600 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

பங்குச்சந்தைகள் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,193.62 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.45 மணி நிலவரப்படி செ... மேலும் பார்க்க

15 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் டாடா எலக்ட்ரிக் கார்கள்! முழு விவரம்!

டாடா நெக்சான் 45 மற்றும் கர்வ் மாடல் எலக்ட்ரிக் கார்களுக்கு 15 ஆண்டுகால பேட்டரி வாரண்டி வழங்கியுள்ளது.முன்னதாக டாடா ஹாரியர் எலக்ட்ரிக் மாடல் காருக்கு இந்த சலுகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் இர... மேலும் பார்க்க