பெரம்பூா் - அம்பத்தூா் இடையே ரூ.182 கோடியில் புதிய ரயில் பாதைகள்: ரயில்வே துறை ...
டெஸ்ட்டில் புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கும் ஜோ ரூட்!
இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கிப் பயணித்து வருகிறார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வருகிற ஜூலை 23 ஆம் தேதி தொடங்குகிறது.
புதிய சாதனையை நோக்கி...
இரு அணிகளும் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்காக தயாராகி வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைக்க காத்திருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைக்கவுள்ளார். இந்த சாதனையை படைக்க ஜோ ரூட்டுக்கு இன்னும் 120 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் 120 ரன்கள் குவிக்கும் பட்சத்தில், இந்த சாதனையை அவர் படைப்பார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மகத்தான சாதனையை தன்வசம் வைத்துள்ளார். 13,378 ரன்களுடன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 13,289 ரன்களுடன் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் 3-வது இடத்திலும், 13,288 ரன்களுடன் ராகுல் டிராவிட் 4-வது இடத்திலும் உள்ளனர்.
தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் 13,259 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஜோ ரூட் 120 ரன்கள் எடுத்தால், ஜாக் காலிஸ் மற்றும் ராகுல் டிராவிட்டின் சாதனை மட்டுமின்றி, ரிக்கி பாண்டிங்கின் சாதனையும் முறியடிக்கப்படும்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஜோ ரூட் படைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Joe Root, one of the senior players of the England team, is on his way to a new record in Test cricket.
இதையும் படிக்க: இந்திய அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரர்; பாராட்டு மழையில் ரவீந்திர ஜடேஜா!