முத்தரப்பு டி20 தொடரிலிருந்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் விலகல்!
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் விலகியுள்ளார்.
ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது.
இந்த முத்தரப்பு டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான கிளன் பிலிப்ஸ் விலகியுள்ளார்.
Squad News | Glenn Phillips has been withdrawn from the tour of Zimbabwe after injuring his right groin. Read more ⬇️ #ZIMvNZ#CricketNationhttps://t.co/DmiXjQi7r2
— BLACKCAPS (@BLACKCAPS) July 18, 2025
இது தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளன் பிலிப்ஸ் போன்ற ஒருவர் அணியில் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. காயம் காரணமாக இந்த முத்தரப்பு டி20 தொடரை கிளன் பிலிப்ஸ் தவறவிடுகிறார். நியூசிலாந்து அணிக்காக விளையாடுவதில் அவர் எவ்வளவு ஆர்வமாக இருப்பார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் விரைவில் குணமடைந்து அணியில் இணைவதை விரும்புகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்தரப்பு டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் கிளன் பிலிப்ஸுக்குப் பதிலாக டிம் ராபின்சன் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The New Zealand all-rounder has withdrawn from the ongoing T20 tri-series in Zimbabwe due to injury.
இதையும் படிக்க: இந்திய அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரர்; பாராட்டு மழையில் ரவீந்திர ஜடேஜா!