டிரம்ப் நியமித்த புதிய தூதருக்கு மலேசியாவில் கடும் எதிர்ப்பு! போராட்டத்தில் மக்க...
பும்ராவுக்கு பணிச் சுமையா? புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன?
இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் பணிச்சுமை மிகவும் முக்கியமான பேசுபொருளாக மாறியிருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிஜிடி தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா அதிகமான ஓவர்கள் வீசியதால் அவருக்கு முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டது. அதனால், கடைசி டெஸ்ட்டில் இரண்டாம் இன்னிங்ஸில் பந்துவீசாமல் வெளியேறினார்.
இந்திய அணி அந்தத் தொடரில் 3-1 என தோல்வியடைந்தது. அதனால், இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பில்லாமல் சென்றது.
தற்போது, இங்கிலாந்துடன் இந்திய அணி 1-2 என தொடரில் பின்னிலையில் இருக்கிறது. மீதமுள்ள 2 போட்டிகளில் பும்ரா எந்தப் போட்டியில் விளையாடுவார் எனத் தெரியவில்லை. நான்காவது டெஸ்ட்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணிச் சுமை காரணமாக மொத்தம் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாட இருப்பதாக முன்னமே கூறப்பட்டது.
ஜன.2024 முதல் அதிக ஓவர்கள் வீசியவர்கள்
1. ஜஸ்ப்ரீத் பும்ரா - 483. 2 ஓவர்கள் - 100 விக்கெட்டுகள் (இந்தியா)
2. மிட்செல் ஸ்டார்க் - 481.2 ஓவர்கள் - 74 விக்கெட்டுகள் (ஆஸி.)
3. முகமது சிராஜ் - 468.3 ஓவர்கள் - 57 விக்கெட்டுகள் (இந்தியா)
குறைவான போட்டிகளில் அதிக ஓவர்கள்
இந்தப் பட்டியலில் பும்ரா 483 ஓவர்களை 39 இன்னிங்ஸில் வீசியுள்ளார். மிட்செல் ஸ்டார்க் 45 இன்னிங்ஸில் 481 ஓவர்கள் வீசியுள்ளார்.
இதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பும்ரா குறைவான இன்னிங்ஸ்களில் கூடுதலாகவே பந்து வீசியுள்ளதால் அவருக்கு பணிச்சுமை இருப்பது தெளிவாக தெரிகிறது.
கடைசி டெஸ்ட்டில் ஒரே ஸ்பெல்லில் 9 ஓவர்கள் வீசிய பென் ஸ்டோக்ஸுக்கு இல்லாத பணிச்சுமையா பும்ராவுக்கு? என முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.