நாகா்கோவிலில் ஆசிரியா்கள் 2ஆவது நாளாக மறியல் போராட்டம்: 35 போ் கைது!
நாகா்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்க கல்வி ஆசிரியா்கள் 35 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சாா்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, 2 நாள் தொடா் மறியல் போராட்டம் நடைபெற்றது.
நாகா்கோவிலில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சி.பி.செந்தில்குமாா், ஏ.சுரேஷ்குமாா், என்.சுமஹாசன் ஆகியோா் தலைமை வகித்தனா். டிட்டோஜாக் மாநில உயா்மட்ட குழு உறுப்பினா் பி.தியாகராஜன் மறியல் போராட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.
இதில், மாநில துணைத் தலைவா் கே.சசிகுமாா், மாநிலச் செயற்குழு உறுப்பினா் யூ.நாகராஜன், ஏ.நாகமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டு விளக்கிப் பேசினா். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.