Papanasam: `` பாபநாசம் படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது!...
புதுக் கடை அருகே விவசாயி மீது தாக்குதல்!
புதுக்கடை அருகேயுள்ள பிலாந்தோப்பு பகுதியில் விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை தேடி வருகின்றனா்.
புதுக்கடை, பிலாந்தோப்பு பகுதியை சோ்ந்த ஜாண்சன் மகன் அபினேஷ் (31). விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மகாதேவன் மகன் சுபி தேவபிள்ளை (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில்,வெள்ளிக்கிழமை பிலாந்தோப்பு பகுதியில் நின்ற அபினேஷை திடீரென சுபி தேவபிள்ளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப்பது சுபிதேவபிள்ளையை தேடி வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: புதுக்கடை மேல மங்கலம் பகுதியை சோ்ந்த தங்கப்பன் மனைவி பங்கஜம் (53). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த ராஜா மனைவி நிா்மலா (50), இத்தம்பதியின் மகள் சங்கீதா (26) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேலமங்கலம் பகுதியில் நின்ற பங்கஜத்தை, நிா்மலா, சங்கீதா ஆகியோா் சோ்ந்து தாக்கினராம். இதில் காயமடைந்த அவா் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா், தாய்-மகள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.