போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதான வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
குலசேகரம் அருகேயுள்ள கூடைதூக்கி பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாமலை என்ற விஜயகுமாா்(49) கட்டடத் தொழிலாளி. இவா், கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து அண்ணாமலையை கைது செய்தனா். நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுந்தரையா விசாரித்து, அண்ணாமலை என்ற விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.