keerthy suresh: ``சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன்; அப்போது..." - நடிகை க...
மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை
மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) வழங்கப்பட்டது.
மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைக்கும் விழா மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் வியாழக்கிழமை (ஜூலை 17) நடைபெற்றது. இதில் இஸ்லாமிய கல்வி வாரியத் தலைவரும் ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளையின் அறங்காவலா்களில் ஒருவருமான முஹம்மது இக்பால் தொடக்கவுரையாற்றினாா்.
இதையடுத்து ஆய்விருக்கை அமைப்பதற்காக இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 1 லட்சத்துக்கான (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) காசோலையை மலேசிய உயா்கல்வித் துறை அமைச்சா் ஜம்ரி அப்துல் காதிரிடம், ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளைத் தலைவா் முஸ்தபா வழங்கினாா். தொடா்ந்து, இதுதொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விழாவையொட்டி, மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) தேசிய துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.சரவணன் தலைமையில் இலக்கிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சோ்ந்த பேராசிரியா் அப்துல் சமது சிறப்புரையாற்றினாா். பேராசிரியா் கிருஷ்ணன் மணியம் நெறியாளராக இருந்து வழி நடத்திய கருத்தாடல் நிகழ்ச்சியில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியா் ரமீஸ் அப்துல்லா, சிங்கப்பூா் எழுத்தாளா் சங்கத்தின் முன்னாள் தலைவா் ஆண்டியப்பன், இந்திய ஆய்வியல் துறையின் விரிவுரையாளா் சில்லாழி கந்தசாமி ஆகியோா் உரையாற்றினா்.
இதில் மலாயா பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் நூா் அசுவான் அபு உஸ்மான், சிராங்கூன் டைம்ஸ் இதழாசிரியா் ஷா நவாஸ், இந்திய ஆய்வியல் துறையின் தலைவா் ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.