Trump: பாலியல் குற்றவாளி வழக்கில் ட்ரம்ப் பெயரா? - அமெரிக்காவில் வெடிக்கும் சர்ச்சை!
எப்ஸ்டீன் ஃபைல் - உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக எடுத்த முதல் அஸ்திரம் என்று கூறலாம்.
எலான் மஸ்க் பதிவு
ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மோதல்போக்கு உண்டான புதிதில், மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், "ட்ரம்ப் பற்றி இப்போது ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும். ட்ரம்பின் பெயர் எப்ஸ்டீன் ஃபைலில் உள்ளது. அது தான், அந்த ஃபைலை பொதுவெளியில் வெளியிடாததற்கான முக்கிய காரணம். ஹேவ் ஏ நைஸ் டே DJT" என்று குறிப்பிட்டிருந்தார்.

யார் இந்த எப்ஸ்டீன்?
ஜெஃப்ரி எப்ஸ்டீன் குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுப்பவர் மற்றும் குழந்தைகளைக் கடத்துபவர் ஆவர். இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த ஏகப்பட்ட குற்றங்கள் அவர் மீது உள்ளன. அவர் குழந்தைகளைக் கடத்துவது அரசியல்வாதிகள், பிசினஸ்மேன்கள், பிரபலங்களுக்காக என்று கூறப்படுகிறது.
இது ஒரு புனைவு
நேற்று முன்தினம், ட்ரம்பிடம் இந்த ஃபைல் குறித்து கேட்கப்பட்டபோது, "எனக்கு எதிராக முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜோ பைடன் மற்றும் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் இயக்குநர் ஜேம்ஸ் கோமியால் புனையப்பட்ட ஆவணங்கள் ஆகும்" என்று பதிலளித்திருந்தார்.
2024-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, தான் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், எப்ஸ்டீன் ஃபைலை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.
ஆனால், இப்போது அது தனக்கு எதிராக புனையப்பட்ட ஒன்று என்று கூறுகிறார். இதனால், ஒருவேளை அவரது பெயரும் அந்த ஆவணத்தில் இடம்பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வெளியான வாழ்த்து
இந்த நிலையில், தற்போது எப்ஸ்டீனுக்கு ட்ரம்ப் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கடிதம் வெளியாகி உள்ளது. இதை 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்னும் அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ளது.
கிஸ்லைன் மேக்ஸ்வெல் எப்ஸ்டீனின் கூட்டாளி ஆவார். இவர் 2003-ம் ஆண்டு எப்ஸ்டீன் பிறந்தநாளுக்காக, பலரிடம் இருந்து வாழ்த்து கடிதங்களைப் பெற்று ஆல்பம் ஒன்றை தயாரித்திருந்தார்.
அதில் ட்ரம்பின் கடிதமும் இடம்பெற்றிருக்கிறது. ட்ரம்ப் ஒரு பெண்ணின் அவுட்லைன் வரைந்த பேப்பரில் வாழ்த்து கடிதத்தை டைப் செய்துள்ளார். இந்தக் கடிதத்தில் அவரது கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.
ட்ரம்ப் ரியாக்ஷன்
இந்த கடிதம் வெளியானதில் இருந்து ட்ரம்பிற்கு எதிர்ப்பு மிக அதிகமாக பரவி வருகிறது.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எப்ஸ்டீனுக்கு நான் எழுதியது போல, போலி கடிதத்தை அச்சிட்டுள்ளது.
அது என்னுடைய வார்த்தைகள் அல்ல... நான் அப்படி பேசவும் மாட்டேன். நான் வரைந்ததே கிடையாது. நான் ரூபர்ட் முர்டோக்கிடம் இப்படி போலி கதைகளை அச்சிடக் கூடாது என்று கூறினேன்.
ஆனால், அவர் அதை செய்துள்ளார். அவர் மீதும், அவரது மூன்றாம் தர செய்தித்தாள் மீதும் வழக்கு தொடர போகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
( @realDonaldTrump - Truth Social Post )
— Fan Donald J. Trump TRUTH POSTS (@TruthTrumpPosts) July 18, 2025
( Donald J. Trump - Jul 17, 2025, 9:57 PM ET )
The Wall Street Journal printed a FAKE letter, supposedly to Epstein. These are not my words, not the way I talk. Also, I don’t draw pictures. I told Rupert Murdoch it was a Scam, that he… pic.twitter.com/DLHtH06UDe