``காமராஜரை எருமைத் தோலன் என திமுக விமர்சித்தது!" - அண்ணாமலை காட்டம்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வங்கதேசம், மேற்கு வங்கம் கடற்கரை பகுதியில் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
மேலும், இந்த புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.