செய்திகள் :

மதுரை: ``மாநகராட்சி வரி முறைகேடுட்டில் தமிழக அரசு வெளிப்படையாக இல்லையே ஏன்?'' - சு.வெங்கடேசன் கேள்வி

post image

"மிகப்பெரிய நிறுவனங்கள் கூட வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது, மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி தான் முதலில் பேசியது.." என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன்

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதித்ததில் ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடு நடந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில்,

மதுரை சிபிஎம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன், "2024 ஜூன் மாதத்தில் மதுரை மாநகராட்சி வரி முறைகேடு குறித்து துணைமேயர் நாகராஜன் கேள்வி எழுப்பினார், தொடர்ந்து சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் மூலமும் சிபிஎம் கட்சி சார்பிலும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம்.

இம்முறைகேடு சம்பந்தமாக மாநகராட்சி ஆணையர் புகார் தந்துள்ளார், மாநகராட்சி ஆணையரின் கணினி பாஸ்வேர்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நிர்வாகங்களின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முறைகேடு நடைபெற்றுள்ளது. இதில் ஈடுபட்டது ஒரு சிலர் மட்டுமல்ல, அலுவலகம் அமைத்து வரி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்க கூடும், மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக தமிழக அரசு மதுரை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி ஊழல் விசாரணை அறிக்கை என்ன ஆனது? பெரியார் பேருந்து நிலைய வணிக வளாகம் ஏன் இன்னும் திறக்கப்படவில்லை? விதிமுறைகளுக்கு புறம்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் நடைபெற்றது, ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து ஐஏஎஸ் அதிகாரி நடத்திய விசாரணை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும், மதுரை மாநகராட்சியில் ஆவணங்கள் இல்லாமல் பணம் வாங்கிக் கொண்டு பல முறைகேடுகள் நடந்துள்ளது.

மதுரை மாநகராட்சி

'உன் ஆட்சியில் நடந்ததை நான் கேட்க மாட்டேன், என் ஆட்சியில் நடப்பதை நீ கேட்காதே' என அதிகாரிகள், அரசியல்வாதிகள் முறைகேடுட்டில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சியில் நடந்துள்ள வரி முறைகேட்டில் உரிய நடவடிக்கை எடுப்போம் என தமிழக அரசு ஏன் இன்னும் வெளிப்படையாக சொல்லவில்லை? மாநகராட்சியின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், அரசியல் பொறுப்புகளில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அதிகாரிகள் வரி முறைகேட்டில் ஈடுபட்டிருக்க முடியாது.

மிகப்பெரிய நிறுவனங்கள் கூட வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது, மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சிதான் முதலில் பேசியது, அதிமுக அல்ல. விசாரணைக்கு பின்னர்தான் வரி முறைகேடு எத்தனை ஆண்டுகள் நடைபெற்றுள்ளது என தெரியவரும்" என்றார்.

Doctor Vikatan: கண்களில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கண்தானம் செய்யலாமா?

Doctor Vikatan: கண்களில் ஏதோ காரணத்துக்காக அறுவை சிகிச்சை செய்தவர்கள், கண்தானம் செய்யலாமா... உதாரணத்துக்கு, லேசர், ரெட்டினா அறுவை சிகிச்சை, கேட்டராக்ட் போன்றவற்றுக்குப் பிறகு கண் தானம் செய்யலாமா... கண... மேலும் பார்க்க

அரிதான ரத்த வகையினர் அஞ்ச வேண்டுமா? - நிபுணர் விளக்கம்!

நம்மில் பலருக்கும் A, B, AB, O என நான்கு ரத்த வகைகளும், அவற்றில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இருபிரிவுகளும்பற்றியும் தெரியும். இன்னும் சிலருக்கு பாம்பே ரத்தவகைபற்றியும் தெரிந்திருக்கும். ஆனால், இதுவரை உல... மேலும் பார்க்க

``விசிக மீது சந்தேகத்தை எழுப்பி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கிறார்..'' - எடப்பாடி குறித்து திருமா

‘பிரமாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வருகிறது’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் த... மேலும் பார்க்க

``பிரமாண்டமான கட்சி எங்க கூட்டணிக்கு வருகிறது..'' - எடப்பாடி பழனிசாமி ஓப்பன் டாக்

‘பிரமாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வருகிறது’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் த... மேலும் பார்க்க

US Judges: 17 நீதிபதிகளைப் பணிநீக்கம் செய்த ட்ரம்ப்; அமெரிக்காவில் கடும் சர்ச்சை.. பின்னணி என்ன?

அமெரிக்க ட்ரம்ப் அரசாங்கம், சமீபத்தில், 17 நீதிபதிகளை பணியில் இருந்து நீக்கியுள்ளது.யார் இந்த நீதிபதிகள்? இது குறித்து நீதிபதிகள் சங்கம், "எந்தவொரு காரணமும் இல்லாமல், கடந்த வெள்ளிக்கிழமை 15 நீதிபதிகளு... மேலும் பார்க்க

``பதிலடி கொடுக்காவிட்டால் காமராஜர் ஆன்மா மன்னிக்காது..'' - திருச்சி சிவா பேச்சு குறித்து ஜோதிமணி

தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா காமராஜரைப் பற்றி பேசிய கருத்துகள் எதிர்வினைகளை கிளப்பியிருக்கிருக்கிறது. இந்நிலையில், கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி தனது சமுகவளைதள பக்கத்தில் தனது எதிர்ப்ப... மேலும் பார்க்க