பரோல் கைதியை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்! மருத்துவமனையில் பயங்கரம்!
``விசிக மீது சந்தேகத்தை எழுப்பி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கிறார்..'' - எடப்பாடி குறித்து திருமா
‘பிரமாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வருகிறது’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு முனைப்பு காட்டி வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணியில் வேறு சில கட்சிகளும் இணைய உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறிவருகிறார்.

நேற்று (ஜூலை 16) கடலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர், “ விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை.
திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். விசிக-வின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா திமுக கூட்டணியில் இருக்க வேண்டும்? சிந்தித்து பாருங்கள். அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 17) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ விசிக மீது சந்தேகத்தை எழுப்பினால் திமுக கூட்டணிக்குள் ஒரு குழப்பம் உண்டாகும்.
அதன் மூலமாக விரிசலை ஏற்படுத்த முடியும். இதுதான் எடப்பாடியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. திடீர் என்று சிலர் நீங்கள் ஏன் இவ்வளவு சீட்தான் வாங்குகிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவர்கள் எங்கள் கட்சியின் வளர்சிக்காகவோ, நலனுக்காகவோ கேட்கவில்லை.

எங்களைத் தூண்டிவிடும் நோக்கத்தில்தான் செய்லபடுகிறார்கள். அப்படி செய்தால்தான் திமுக மீது எங்களுக்கு ஒரு வெறுப்பு வரும் என்று நினைக்கிறார்கள். பாஜக மாதிரியான மதவாத சக்திகளை எதிர்ப்பதற்கு மதசார்பற்ற ஒரு கூட்டணி பாதுகாப்பு அரண் என்கிறேன். அதுதான் எங்களுடைய கூட்டணி” என்று திருமாவளவன் பேசியிருக்கிறார்.