செய்திகள் :

``பதிலடி கொடுக்காவிட்டால் காமராஜர் ஆன்மா மன்னிக்காது..'' - திருச்சி சிவா பேச்சு குறித்து ஜோதிமணி

post image

தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா காமராஜரைப் பற்றி பேசிய கருத்துகள் எதிர்வினைகளை கிளப்பியிருக்கிருக்கிறது. இந்நிலையில், கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி தனது சமுகவளைதள பக்கத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில்,

'பெருந்தலைவர் காமராஜர் நேர்மைக்கும், நிர்வாகத்திறமைக்கும் மட்டுமல்ல எளிமைக்கும் பெயர் போனவர் என்பதை உலகறியும். தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும், ஐந்து நட்சத்திர விடுதிகளும் இல்லை.

ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர்.

அவர் ஏ.சி அறை இல்லாமல் உறங்கமாட்டார் என்று சகோதரர் திரு திருச்சி சிவா அவர்கள் சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. எமது தலைவர் காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. 

ஜோதிமணி

காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது, அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு. 

காமராஜருக்கு எதிராகப் பரப்பப்படுகிற கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்தால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. அவரின் பெயராலேயே காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணில் இன்றளவும் அரசியல் களத்தில் நிற்கிறது என்பதை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நினைவில் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

``விசிக மீது சந்தேகத்தை எழுப்பி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கிறார்..'' - எடப்பாடி குறித்து திருமா

‘பிரமாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வருகிறது’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் த... மேலும் பார்க்க

``பிரமாண்டமான கட்சி எங்க கூட்டணிக்கு வருகிறது..'' - எடப்பாடி பழனிசாமி ஓப்பன் டாக்

‘பிரமாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வருகிறது’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் த... மேலும் பார்க்க

US Judges: 17 நீதிபதிகளைப் பணிநீக்கம் செய்த ட்ரம்ப்; அமெரிக்காவில் கடும் சர்ச்சை.. பின்னணி என்ன?

அமெரிக்க ட்ரம்ப் அரசாங்கம், சமீபத்தில், 17 நீதிபதிகளை பணியில் இருந்து நீக்கியுள்ளது.யார் இந்த நீதிபதிகள்? இது குறித்து நீதிபதிகள் சங்கம், "எந்தவொரு காரணமும் இல்லாமல், கடந்த வெள்ளிக்கிழமை 15 நீதிபதிகளு... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

Doctor Vikatan:சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆரோக்கிய உணவா... பொதுவாக ஜிம் செல்வோர், உடற்பயிற்சி செய்வோர்தான் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதைப் பார்க்கிறோம். எல்லோரும் சாப்பிடலாமா, அதில் மாவுச்சத்தும் ச... மேலும் பார்க்க

இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது? - ட்ரம்ப் அறிவிப்பு; வரி குறைக்கப்படுமா?

வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பரஸ்பர வரி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி வரை காலக்கெடு. இந்த நாள்களில் அமெரிக்கா ... மேலும் பார்க்க

Health: சோர்வே போ போ.. எனர்ஜியே வா வா..! டாக்டர் கைடன்ஸ்!

சோர்வு... இதை அசதி, அலுப்பு, களைப்பு, தளர்ச்சி என்றெல்லாம் சொல்வார்கள். பொதுவாகவே நாள் முழுவதும் வேலை பார்ப்பதால், இரவில் சோர்வு ஏற்படுவது இயல்பே. சில வேளைகளில், பல நாள்கள் ஓய்வில்லாமல் வேலை பார்த்து,... மேலும் பார்க்க