kamarajar: `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperf...
திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல் நலம் குறைவு காரணமாக வியாழக்கிழமை(ஜூலை 17) காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், வேலு பிரபாகரன் வியாழக்கிழமை பிற்பகல் 12.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.