சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
சிதம்பரம்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், திமுக, பாமக, நாம் தமிழர்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து சுமார் 750 பேர் வியாழக்கிழமை தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
டலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில் கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திமுக, பாமக, நாம் தமிழர்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து சுமார் 750 பேர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
பின்னர் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், அதிமுகவில் இணைந்தவர்களை எங்களில் ஒருவராக ஏற்கிறோம். மக்களுக்காக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அதிமுக. பொன்விழா கண்ட கட்சி. 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்ட கட்சியில் இணைந்தது பெருமை என்றார் எடப்பாடியார்.
நிகழ்ச்சிக்கு கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்வி ராமஜெயம், கே.ஜெயபால், முன்னாள் எம்எல்ஏ நாக.முருகுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.