செய்திகள் :

உலகக் கோப்பை தொடர் குறித்து அதிகம் யோசிக்கவில்லை: தீப்தி சர்மா

post image

உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நேற்று (ஜூலை 16) தொடங்கியது.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 62 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்த தீப்தி சர்மா, ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

அதிகம் யோசிக்கவில்லை

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நிலையில், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் யோசிக்கவில்லை என தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை பொருத்தவரையில், ஒரு அணியாக இலங்கை மற்றும் இந்தியாவில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன. அதனால், உலகக் கோப்பை குறித்து அதிகம் யோசிக்கவில்லை. ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணி அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடர் வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Deepti Sharma, one of the Indian team's all-rounders, has said that she has not thought much about the World Cup series.

இதையும் படிக்க: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டது; பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுகிறாரா?

4-வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? பயிற்சியாளர் பதில்!

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்பது குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு... மேலும் பார்க்க

டி20 தொடரைக் கைப்பற்றி இலங்கையில் வரலாறு படைத்த வங்கதேசம்!

இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றி வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது.வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான ... மேலும் பார்க்க

கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டது; பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுகிறாரா?

கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம்: டாப் 10-இல் 5 ஆஸி. வீரர்கள்!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக டாப் 10இல் 5 ஆஸி. வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கிரிக்கெட் உலகில் அதிகமான உலகக் கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தி வருகிறது. கடந்த... மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: 2 இளம் வீரர்கள் உள்பட 16 பேர் கொண்ட மே.இ.தீ. அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு 16 பேர் கொண்ட மே.இ.தீ. அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி 3-0 என டெஸ்ட் தொடரை வென்றது. அடுத்தத... மேலும் பார்க்க