பிருத்வி-2, அக்னி-1 ஏவுகணைகளின் சோதனை வெற்றி!
ஒடிசா கடல்பகுதியில், பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒடிசா கடல்பகுதியிலுள்ள அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் (ஐடிஆர்), குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளான பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 ஆகிய ஏவுகணைகளின் சோதனைகள் இன்று (ஜூலை 17) வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், இந்தச் சோதனைகளின் மூலம் ஏவுகணைகளின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அளவுகளைச் சரிபார்த்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சோதனைகளில், முதலில் அக்னி - 1 ஏவுகணை அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட சில மணி நேரம் கழித்து, பிருத்வி ஏவுகணை சந்திப்பூரிலுள்ள ஐடிஆரின் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாகச் சோதனைச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!