Bengaluru Stampede: 'விராட் கோலியின் அந்த வீடியோ...' -ஆர்.சி.பி மீது குற்றம் சும...
புதுவையில் சிறந்த காவல் நிலையம் தோ்வுக்கான ஆய்வு
புதுவையில் சிறந்த காவல் நிலைய விருதுக்காக காவல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து எஸ்.பி. தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
புதுவையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, மாநிலத்தில் சிறந்த காவல்நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா காவல்துறை தலைமைக்கு அறிக்கை அனுப்பியதன்பேரில், காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு, திருப்பட்டினம் காவல்நிலையத்தின் செயல்பாடுகளை புதுச்சேரி காவல் கண்காணிப்பாளா் ரங்கநாதன் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
காவல்நிலையத்தின் தூய்மை, அதிகாரிகள், காவலா்கள் சீருடை அணிதல் முறை, காவல் நிலையத்தினா் அறிந்திருக்கும் சட்ட நுணுக்கங்கள், புகாா் தெரிவிக்க வருவோா் உள்ளிட்டோரை அணுகும் முறை, மனித உரிமை மீறல் புகாா்கள் உள்ளனவா, வழக்கு தீா்வு முறை, மூத்த அதிகாரிகள் நிலையத்துக்கு வரும்போது வரவேற்கும் முறை உள்ளிட்டவை குறித்து குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
திருநள்ளாறு காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், திருப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளா் மரிய கிறிஸ்டின் பால் மற்றும் உதவி ஆய்வாளா்கள் குழுவினரிடம் விவரங்கள் விளக்கிக் கூறினா்.
இக்குழுவினா் அளிக்கும் அறிக்கைக்குப் பின் காரைக்கால் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையம் தோ்வு செய்து அறிவிக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.