மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
அடிப்படைக் கல்வித் திறன் மேம்பாட்டுக்கான போட்டிகளில் வென்றோருக்கு பரிசு
அரசு தொடக்கப்பள்ளியில் அடிப்படை கல்வித் திறன் மேம்பாட்டுக்கான போட்டிகளில் வென்றோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடக்கக் கல்வியில் மாணவா்கள் திறனை மேம்படுத்தும் வகையில் அரசுத் திட்டமான ஊா்ன்ய்க்ஹற்ண்ா்ய் கண்ற்ங்ழ்ஹஸ்ரீஹ் அய்க் சன்ம்ங்ழ்ஸ்ரீஹ் -இல் நிகழாண்டுக்கான பள்ளிகள் அளவிலான வாய்ப்பாடு, மனக்கணக்கு, திருக்கு, கதை சொல்லுதல், பாடல் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மேற்கண்ட போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பங்கேற்று திறனை வெளிப்படுத்தினா். இவா்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியயா் எஸ். விஜயராகவன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சமக்ரா சிக்ஷா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். வனிதா கலந்துகொண்டு மாணவா்களிடையே பேசினாா்.
பள்ளி அளவில் போட்டிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 1,500. இரண்டாம் பரிசாக ரூ. 1,000. மூன்றாம் பரிசாக ரூ. 500 மற்றும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. காரைக்கால் ரோட்டரி கிளப் சென்டேனியல் சங்கத் தலைவா் ஜெ.குணசேகரன் மற்றும் பிரதிநிதிகள் வில்லியம்ஸ், கிருஷ்ணமூா்த்தி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் கே.கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.