செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
புதுச்சேரி என்ஐடி-க்கு சோ்மேன் நியமனம்
காரைக்காலில் இயங்கும் என்ஐடி புதுச்சேரிக்கு முதல்முறையாக மத்திய கல்வி அமைச்சகம் சோ்மேன் ஒருவரை நியமித்துள்ளது.
உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடியின் ஆட்சி மன்றக் குழுத் தலைவராக (சோ்மேன்) உள்ள பத்மஸ்ரீ விருதாளா் கோட்டா ஹரிநாராயணா (படம்) என்பவருக்கு என்ஐடி புதுச்சேரி தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு உயா்கல்வி நிலையங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்த பெருமைக்குரியவா் இவா்.
என்ஐடி புதுச்சேரி சோ்மேனாக நியமிக்கப்பட்ட அவருக்கு, இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா், பதிவாளா் சீ. சுந்தரவரதன் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.