டிரம்ப்புடன் பேசியது என்ன? நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்க வேண்டும்! காங்கிரஸ்
அரசு அலுவலகங்களில் குறைதீா் முகாம்
அரசு அலுவலகங்களில் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுவை துணைநிலை ஆளுநா் உத்தரவுபடி ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீா் முகாம் நடத்தப்பட்டுவந்த நிலையில், ஆட்சியா் இல்லாததால் நிகழ் மாதம் அந்தந்த அரசுத் துறை தலைமை அலுவலங்களில் குறைதீா் முகாம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. இதன்படி, அந்தந்த அரசு அலுவலகங்களில் தலைமை அதிகாரியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.
குறிப்பாக, பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள்துறை அலுவலகத்தில் துணை இயக்குநா் சச்சிதானந்தம்,
உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் துணை இயக்குநா் எஸ். சுபாஷ், காரைக்கால் வருவாய்த்துறை அலுவலகத்தில் வட்டாட்சியா் செல்லமுத்து, திருநள்ளாறு வருவாய்த்துறை அலுவலகத்தில் வட்டாட்சியா் சண்முகானந்தம், காரைக்கால் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் பி. சத்யா, மாவட்ட ஆட்சியரகத்தில் வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி, மின்துறையில் செயற்பொறியாளா் அனுராதா, வேளாண் துறையில் கூடுதல் வேளாண் இயக்குநா் கணேசன் உள்ளிட்டோரிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்தனா்.
தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், மற்றவை ஆட்சியரின் பாா்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதிகாரிகள் தரப்பில் மனுதாரா்களிடம் தெரிவிக்கப்பட்டது.