செய்திகள் :

Kiara Advani: "எங்கள் மனம் நிறைந்திருக்கிறது!" - கியாரா, சித்தார்த் தம்பதிக்கு பெண் குழந்தை

post image

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி இணைக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

எம்.எஸ்.தோனியின் பயோபிக்கில் சாக்ஷியாக நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் கியாரா அத்வானி. தொடர்ந்து `கபீர் சிங்', `ஷேர்ஷா' போன்ற படங்கள் மூலமாகத் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்
கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்

`ஷேர்ஷா' படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்த அவர், அவரையே காதலித்து கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின்பும் நடித்துவந்த கியாரா அத்வானி கடந்தாண்டு கர்ப்பமானதைத் தொடர்ந்து நடிப்பிலிருந்து ஓய்வெடுத்தார்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 15) மாலை மும்பையில் கியாரா அத்வானிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனைத் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் அறிவித்திருக்கின்றனர்.

அவர்கள் வெளியிட்டிருக்கும் பதிவில், “எங்கள் மனம் முழுவதும் நிறைந்திருக்கிறது. எங்களுடைய உலகம் என்றும் மாறாது. எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது” என்று பதிவிட்டிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, பாலிவுட் நட்சத்திரங்கள், ரசிகர்கள் கியாராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

`60, 70 நாள்கள் வந்தால்போதும் என்றார்கள், ஆனால் இப்போது..!’ - எம்.பி பதவி பற்றி கங்கனா ரனாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஹிமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் இருந்து முதல் முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த எம்.பி வேலை தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்று கங்கனா ... மேலும் பார்க்க

Humaira Asghar: வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை ஹுமைரா; அதிர்ச்சியில் பாகிஸ்தான் திரையுலகம்

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகையானஹுமைரா அஸ்கர் அலி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.பாகிஸ்தானைச் சேர்ந்தபிரபல நடிகை ஹுமைரா அஸ்கர் அலி. பாகிஸ்தான் திரைப்படங்கள் மற்... மேலும் பார்க்க

Alia bhatt: போலி பில்கள் தயாரிப்பு; நடிகையிடம் ரூ.77 லட்சம் மோசடி செய்த முன்னாள் உதவியாளர் கைது

பிரபல பாலிவுட் நடிகையான அலியா பட்‌டின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளர் ரூ.77 லட்சம் மோசடி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். வேதிகா பிரகாஷ் ஷெட்டி என்ற 32 வயதான இவர், நடிகையின் தயாரிப்பு நிறுவனமான Et... மேலும் பார்க்க

The Hunt - The Rajiv Gandhi Assassination Case Review: ராஜீவ் காந்தி கொலையும் தேடுதல் வேட்டையும்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்தி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்கூணூரின் 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' வெப் சீரிஸ். புலனாய்வு பத்... மேலும் பார்க்க

``எங்கள் மகள் சோஷியல் மீடியாவில் இல்லாததற்குக் காரணம் ஐஸ்வர்யா ராய்" - மனம் திறந்த அபிஷேக் பச்சன்

நடிகர் அபிஷேக் பச்சனின் காளிதர் லாபட்டா ஜூலை 4-ம் தேதி ஜீ 5 ஓடிடி-ல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அபிஷேக் பச்சன் ஈடுபட்டுவருகிறார். சமீபத்தில் நயன்தீப் ரக்ஷித் என்ப... மேலும் பார்க்க