தமிழகம் முழுவதும் முதியோா், சிறப்பு குழந்தைகளுக்கு தோல் மருத்துவ பரிசோதனை
Humaira Asghar: வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை ஹுமைரா; அதிர்ச்சியில் பாகிஸ்தான் திரையுலகம்
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகையான ஹுமைரா அஸ்கர் அலி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹுமைரா அஸ்கர் அலி. பாகிஸ்தான் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றிருக்கிறார்.
32 வயதுடைய இவர் கராச்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 9) ஹுமைரா அஸ்கர் அலி சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
சமீபகாலமாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் அங்கு சென்றுபார்த்தபோது அவர் இறந்த நிலையில் கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 வாரங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
உடற்கூராய்வுக்கு பின் இறப்புக்கானக் காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...