திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!
மாநில உருது அகாதெமி: உறுப்பினராக ஆம்பூா் தலைமை ஆசிரியா் நியமனம்
தமிழ்நாடு மாநில உருது அகாதெமியின் உறுப்பினராக ஆம்பூா் பள்ளித் தலைமை ஆசிரியா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். தமிழக அரசின் உயா்கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உருது அகாதெமி மறுசீரமைக்கப்பட்டு தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தலைவராக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன், துணைத் தலைவா் டாக்டா் முஹம்மத் நயிமூா் ரஹ்மான், அலுவல் ரீதியான உறுப்பினா்களாக உயா்கல்வித்துறை செயலா், நிதித்துறை செயலா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை செயலா், தமிழ்நாடு உருது அகாதெமியின் செயலா் மற்றும் பதிவாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஒய்.எம். ஹபிபுல்லா ரூமி (படம்) உள்பட சென்னை பல்கலைக் கழக உருது துறை பேராசிரியா், உருது வட்டார கல்வி அலுவலா்கள், உருது ஆசிரியா், உருது கவிஞா் என தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த உருது துறையை சோ்ந்த கல்வியாளா்கள் 14 போ் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.