1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு டிஆர்பி தேர்வு அறிவிப்பு!
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று(ஜூலை 10) வெளியிட்டுள்ளது.
1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று(ஜூலை10) முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 28 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஆகஸ்ட் 13 முதல் 18 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம்.