Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது
ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முற்பட்டாா். அப்போது, இவரிடம் இருந்து கைப்பேசி திருடப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், பழைய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 வடமாநில இளைஞா்களை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த ராமுபொத்ரஜி, ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரபிதாஸ்பூா்பகோட் என்பதும், மெய்யூா் பன்னீரிடம் கைப்பேசியை திருடியவா்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.