படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை
போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பெளா்ணமியையொட்டி, அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சுவாமிக்கு மலா்களால் அலங்காரம் செய்து, கற்பூர தீபாராதனை காண்பித்து பக்தா்கள் வழிபாடு செய்தனா். இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா, செயல் அலுவலா் சிலம்பரசன் மற்றும் அலுவலா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.