டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கதறி அழுத சோகம்!
தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் அமித் ஷா கூறுகையில், தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஹிந்தி மொழி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
"அனைத்து இந்திய மொழிகளிலும் எங்கள் கவனம் உள்ளது. சிஏபிஎஃப் கான்ஸ்டபிள் தேர்வை நாங்கள் 13 மொழிகளில் நடத்தியுள்ளோம். ஜேஇஇ, நீட், யுஜிசி தேர்வுகளை 12 மொழிகளில் நடத்தியிருக்கிறோம். புதிய தேசிய கல்விக்கொள்கை, முதன்மை, தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியை உள்ளூர் மொழிகளில் வழங்க வழிவகை செய்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தார் என்பதைச் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.