2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
பாஜக: "திமுக கூட்டணி சுக்குநூறாக உடையும்; அமித்ஷா சொன்னதே எங்களுக்கு வேத வாக்கு" - எல்.முருகன்
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது.
திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பேசியதாவது...
"கம்யூனிஸ்ட் கட்சியும், திருமாவளவனும் தினமும் திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
'என்றைக்கு இந்தக் கூட்டணியிலிருந்து ஓடலாம்?' என்ற நிலையில் திருமாவளவன் இருக்கிறார்.
வைகோ அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழலில் இருக்கிறார்.
இதைப்பற்றியெல்லாம் கேட்காமல், எங்கள் கூட்டணியைப் பற்றி மட்டும் கேட்கிறீர்கள்.
அமித்ஷா சொன்னதே எங்களது வேதவாக்கு
எங்களுடைய கூட்டணி பலமாக உள்ளது. அதனால், எங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்காதீர்கள்.
அவர்களது கூட்டணி சுக்குநூறாக உடையப்போகிறது. எங்களுடைய கூட்டணியில் பலர் இணைந்து, இன்னமும் பலமாக உள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், 'கூட்டணி ஆட்சி அமையும்' என்று அமித்ஷா ஜி கூறியது எங்களது வேதவாக்கு" என்று பேசியுள்ளார்.