தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!
தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் உள்ளூர் ரயிலில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸுக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரது ரயிலிலேயே பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது.
இதனைக் கண்ட சக பயணிகள் மும்ப்ரா ரயில் நிலையத்தில் அவசரகால அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். உடனே ஹினா ஆட்டோவில் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.
ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!
இதைத்தொடர்ந்து ஹினாவின் கணவர் ரயில்வே போலீஸ் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
"எங்கள் பணியாளர்களின் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால், அந்தப் பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு, இருவரின் உயிர்களும் காப்பாற்றப்பட்டன" என்று கூறி, அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சியை ரயில்வே போலீஸ் அதிகாரி பாராட்டினார்.