செய்திகள் :

சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?

post image

சென்னை கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் சடலத்தின் பின்னணியில் ஆந்திரத்தின் ஜனசேனை கட்சி நிர்வாகியின் கொலை சம்பவம் வெளிவந்துள்ளது.

சென்னை கூவம் ஆற்றின் அருகே கடந்த செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 8) மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை சென்னை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சென்னை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதன்போது, காரில் வந்த சிலர் சடலத்தை வீசிச் சென்றது தெரிய வந்தது.

சிசிடிவி காட்சியில் பதிவான கார் பதிவெண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணயில், காரில் வந்தவர்கள் ஜனசேனை கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனை கட்சியின் ஐடி விங் நிர்வாகி சிவக்குமார், காளஹஸ்தி தொகுதி நிர்வாகி விணுதா கோட்டா, அவரது கணவர் சந்திரபாபு, உதவியாளர் கோபி, ஓட்டுநர் ஷேக் தாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, விசாரணை வட்டத்தில் உட்படுத்தப்பட்டனர்.

விணுதாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஸ்ரீனிவாசலு என்ற ராயுடு என்று கூறினார்.

ஜனசேனை கட்சித் தலைவர் பவன் கல்யாணுடன் விணுதா கோட்டா மற்றும் அவரது கணவர் சந்திரபாபு

விணுதாவின் வீட்டில் 2019 ஆம் ஆண்டுமுதல் ராயுடு வேலைபார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், விணுதாவின் அறையில் உடை மாற்றியபோது, அவர் அறையின் கட்டிலின்கீழ் மொபைல் இருப்பதும், அதில் தான் உடைமாற்றும் காட்சி பதிவாகியிருப்பதும் கண்டு விணுதா அதிர்ச்சியடைந்தார்.

மேலும், இதனை தனது கணவர் சந்திரபாபுவிடம் கூறிய விணுதா, அந்த மொபைலானது ராயுடுவின் என்றும் கூறினார்.

இதனையடுத்து, ராயுடுவிடம் விணுதாவும் சந்திரபாபுவும் விசாரித்தபோது, தெலுங்குதேசக் கட்சி எம்.எல்.ஏ. சுதீர் ரெட்டிதான் பணம் கொடுத்து, விணுதா தொடர்பான அந்தரங்கப் படங்களையும், விணுதா வீட்டில் பேசப்படும் ஜனசேனை கட்சி ரகசியங்கள் குறித்தும் உளவுபார்க்கவும் கோரப்பட்டதாக ராயுடு கூறியுள்ளார்.

இதற்கு முன்பாக, கடந்த ஆந்திரப் பேரவைத் தேர்தலில் விணுதாவுக்கு வழங்கப்படுவதாய் இருந்த சீட்டு, சுதீர் ரெட்டிக்கு வழங்கப்பட்டு, அவர் வெற்றியும் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, ராயுடுவின் செயல் குறித்தும் சுதீர் ரெட்டி குறித்தும் ஜனசேனை கட்சி தலைமையிடம் விணுதா புகார் அளித்தார். விணுதாவையும் அவரது கணவரையும் சமாதானப்படுத்தி கட்சித் தலைமை அனுப்பியபோதிலும், ராயுடுவை வெளியில் விடாமல் வீட்டினுள் வைத்தே கொடுமைப்படுத்தி வந்துள்ளனர், விணுதாவும் அவரது கணவரும்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமையில் கழிப்பறை சென்ற ராயுடு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறும் விணுதா, ராயுடுவின் உடலை சென்னை கூவம் ஆற்றின் கரையில் வீசிவிட்டு சென்றதாக தமிழக காவல்துறையில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, ஆந்திரத்தின் காவல்துறையினரிடம் தமிழக காவல்துறை கலந்தாலோசித்து மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.

JSP leader arrested in murder case, sacked from party

இந்தியாவுடன் நட்புறவைக் கெடுக்க முயற்சி! ஈரான் எச்சரிக்கை!

ஈரான் அரசின் பெயரில் போலிக் கணக்குகள் இந்தியாவின் நட்புறவைக் கெடுக்க முயற்சிப்பதாக ஈரான் தூதரகம் எச்சரித்துள்ளது.ஈரானுடனான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்ததையடுத்து, ஈரான் மீது குண்டும் வீசியது.... மேலும் பார்க்க

கேரளத்தில் கார் வெடித்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் பலி

கேரளத்தில் கார் வெடித்த சம்பவத்தில் தீக்காயமடைந்த 2 சிறுவர்களும் சிகிச்சைப் பலனின்றி பலியாகினர். கேரள மாநிலம், வடக்கு பாலக்காடு மாவட்டத்தில் வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளிப்பு! காப்பாற்ற முயன்ற மாணவருக்கும் 70% தீக்காயம்!

ஒடிசாவில் ஆசிரியல் பாலியல் தொல்லையளித்ததாக மாணவி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள ஃபாகிர் மோகன் கல்லூரியில் ஒரு மாணவிக்கு சமீர்குமார் சாஹு என... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்குக்கு ஏற்பட்டபிறகு, முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன.கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்... மேலும் பார்க்க

விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம் எதிர்ப்பு

புது தில்லி: அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு, விமானிகளின் தவறே காரணம் என்பது போன்று விசாரணை திசை திருப்பப்படுவதற்கு, இந்திய விமானிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.அகமதாபாத் ஏ... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க