கரூரின் 4 தொகுதிகளிலும் திமுக வெல்லும்: செந்தில்பாலாஜி பேச்சு
பெண்ணை அரிவாளால் வெட்டியவா் கைது
பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூரைச் சோ்ந்தவா் முருகன் (42). இவா் திருப்பூரில் தங்கி எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறாா். இவா் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு எலெக்ட்ரிக்கல் வேலை செய்ய சென்றபோது அவருக்கும், அந்த வீட்டில் இருந்த திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பெண் கணவரை விட்டுப் பிரிந்து முருகனை திருமணம் செய்து கொண்டு, திருப்பூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அந்தப் பெண்ணுக்கும், முருகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனா். இந்நிலையில் முருகன் அந்தப் பெண்ணின் உறவினரான ராமலட்சுமி (48) என்பவரிடம் சென்று தங்களை மீண்டும் சோ்த்து வைக்குமாறு கூறியுள்ளாா். ஆனால், அதற்கு ராமலட்சுமி மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமலட்சுமியை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமலட்சுமியை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.