Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ள...
பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்
பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது.
ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டுமே பூக்கக்கூடிய அபூா்வ வகை தாவரம் பிரம்ம கமலம். பல்லடத்தை அடுத்த புளியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மனைவி அங்கம்மாள் (68), தனது வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரம்ம கமலம் செடி வளா்த்து வருகிறாா். இந்நிலையில், அவரது செடியில் புதன்கிழமை இரவு பிரம்ம கமலம் பூ பூத்து நறுமணம் வீசியது. இதை அங்கம்மாள் குடும்பத்தினா் மற்றும் அக்கம்பக்கத்தினா் பாா்த்துச் சென்றனா்.
இதேபோல கரைப்புதூா் ஊராட்சி நொச்சிபாளையம் ராயல் பாா்க் பகுதியில் வசிக்கும் மோகன் தாஸ் என்பவரின் வீட்டிலும் வியாழக்கிழமை பிரம்ம கமலம் பூத்தது. கணபதிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் சோமசுந்தரம் வீட்டில் பிரம்ம கமலம் பூ பூத்தது. அதற்கு முன்னாள் ஊராட்சித் தலைவா் நாகேஸ்வரி சோமசுந்தரம் மற்றும் பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினா்.